/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாடகை விவகாரத்தில் விதிமீறல்; 22 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
/
வாடகை விவகாரத்தில் விதிமீறல்; 22 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
வாடகை விவகாரத்தில் விதிமீறல்; 22 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
வாடகை விவகாரத்தில் விதிமீறல்; 22 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
ADDED : பிப் 26, 2024 12:32 AM

செங்குன்றம் : செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டுச்சாலையில், செங்குன்றம் மஸ்ஜிதே ஆயிஷா மசூதி நிர்வாகத்திற்கு சொந்தமாக, 22 கடைகள் உள்ளன.
அதில், பிரியாணி, டீக்கடை மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.
பாடியநல்லுாரைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவர், மேற்கண்ட மசூதி நிர்வாகத்திடம் குறைந்த வாடகையில் கடையை பெற்று, விதிமீறி கூடுதல் வாடகைக்கு மற்றொருவருக்கு மாற்றியிருந்தார்.
இது குறித்து, மசூதி நிர்வாகம் அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அளித்து, அதற்கான கால அவகாசம் கொடுத்தது. ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, மஸ்ஜிதே ஆயிஷா மசூதியின் சொத்து மீட்பு குழு, மேற்கண்ட பிரச்னை குறித்து, தமிழ்நாடு வக்பு வாரியத்தில் புகார் செய்தது.
விசாரித்த வாரியம், குறிப்பிட்ட அந்த கடைக்கு 'சீல்' வைக்க உத்தரவிட்டது.
அதன்படி, வக்பு வாரியத்தின் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் காதர் செரீப் மேற்பார்வையில், நேற்று முன்தினம், கடையில் இருந்த பொருட்களை உரியவரிடம் முறைப்படி ஒப்படைத்து, கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
அதன் பின், மஸ்ஜிதே ஆயிஷா மசூதி நிர்வாகத்தினரிடம், கடையின் சாவி ஒப்படைக்கப்பட்டது.

