/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூனாம்பேடிலிருந்து திண்டிவனத்திற்கு தொழுப்பேடு வழியே பஸ் வருமா?
/
சூனாம்பேடிலிருந்து திண்டிவனத்திற்கு தொழுப்பேடு வழியே பஸ் வருமா?
சூனாம்பேடிலிருந்து திண்டிவனத்திற்கு தொழுப்பேடு வழியே பஸ் வருமா?
சூனாம்பேடிலிருந்து திண்டிவனத்திற்கு தொழுப்பேடு வழியே பஸ் வருமா?
ADDED : டிச 29, 2024 08:42 PM
அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையில் இருந்து, 50க்கும் மேற்பட்ட நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால், சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு பணிக்குச் செல்வோர் என, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற நகர் பகுதிகளுக்குச் செல்ல பேருந்து வசதி அதிகம் உள்ளது.
ஆனால் சூனாம்பேடு, அச்சிறுபாக்கம், திண்டிவனம் போன்ற பகுதிகளுக்கு போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை.
மதுராந்தகம் பகுதியில் இருந்து சூனாம்பேடுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோன்று, அச்சிறுபாக்கம் பகுதிக்கு எலப்பாக்கம், ஒரத்தி, முருங்கை, அனந்தமங்கலம் செல்லும் பேருந்துகள், அச்சிறுபாக்கம் வழியாக கிராம பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
ஆனால், சூனாம்பேட்டில் இருந்து அச்சிறுபாக்கம் வழியாக திண்டிவனம் செல்ல, அரசு பேருந்து வசதி இல்லை.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு கலைக் கல்லுாரி மற்றும் பொறியியல் கல்லுாரி, தனியார் கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர், பேருந்தில் கட்டணம் செலுத்தியே சென்று வருகின்றனர்.
விழுப்புரம், புதுச்சேரி, கடலுார், திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்குச் செல்ல, திண்டிவனம் நகர் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இதனால், சூனாம்பேட்டில் இருந்து நெற்குணம், ஆயக்குன்னம், புத்தமங்கலம், வயலுார், ஆத்துார், தொழுப்பேடு, அச்சிறுபாக்கம் வழியாக, திண்டிவனம் வரை அரசு பேருந்து இயக்க வேண்டும்.
இதனால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவர்.
எனவே, சூனாம்பேட்டில் இருந்து அச்சிறுபாக்கம் வழியாக திண்டிவனத்திற்கு பேருந்து இயக்க, போக்குவரத்து துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

