/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓராண்டாக முடங்கிய 'பார்க்கிங்' ஏலம் வரும் 27ம் தேதி நடப்பதாக அறிவிப்பு
/
ஓராண்டாக முடங்கிய 'பார்க்கிங்' ஏலம் வரும் 27ம் தேதி நடப்பதாக அறிவிப்பு
ஓராண்டாக முடங்கிய 'பார்க்கிங்' ஏலம் வரும் 27ம் தேதி நடப்பதாக அறிவிப்பு
ஓராண்டாக முடங்கிய 'பார்க்கிங்' ஏலம் வரும் 27ம் தேதி நடப்பதாக அறிவிப்பு
ADDED : செப் 22, 2024 03:39 AM
சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் சர்ச்சைகளால் ஓராண்டாக முடங்கியிருந்த வாகன நிறுத்துமிட ஏலத்தை, வரும் 27ம் தேதி நடத்துவதாக, ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம்அருகே, சதுரங்கப்பட்டினம் ஊராட்சி உள்ளது. அணுசக்தி வளாக நுழைவாயில் பகுதியில், ஊராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.
கல்பாக்கம் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள், அவர்களின் இருசக்கரவாகனங்களை, ஊராட்சி இடத்தில் நிறுத்தி, அணுசக்தி வளாகம் செல்கின்றனர். கார், கனரக வாகனங்களும் நிறுத்தப்படு கின்றன.
வாகன பாதுகாப்பு, ஊராட்சி நிர்வாக வருவாய் கருதி, அங்கு கட்டண வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த, ஊராட்சி நிர்வாகம் 2022ல் முயற்சி செய்தது.
தினமும் தலா 10 ரூபாய், மாதக் கட்டணம் 200 ரூபாய் என நிர்ணயித்து, ஊராட்சி நிர்வாகமே நடத்த, ஊரக வளர்ச்சித் துறையிடம் அனுமதியும் பெற்றது.
இந்நிலையில், ஊராட்சி தலைவர்ரேவதியின் கணவரான, அ.தி.மு.க., பிரமுகர்சாமிநாதனுக்கும், தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றியக்குழு பிரதிநிதிக்கும் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, கட்டண வசூலுக்கு, தி.மு.க., பிரமுகர் முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம், கட்டணம் வசூலிக்கும் குத்தகையை, பொது ஏலத்தில் தனியாரிடம் அளிக்க, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றது.
கடந்தாண்டு அக்., 4ம் தேதி பொது ஏலம் நடத்தியது. தி.மு.க., பிரமுகர் சார்பில் 20 பேர், பிறர் 10 பேர் என, ஏலத்தில் பங்கேற்க பதிந்ததாககூறப்படுகிறது.
ஆனால், யாருமே ஏலம் எடுக்காததால் ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க., பிரமுகரின் முட்டுக்கட்டையால், அதிகாரிகளும் ஏலம் நடத்த ஒத்துழைக்காததாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக, ஊராட்சி தலைவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, வரும் 27ம் தேதி பொது ஏலம் நடத்துவதாக, ஊராட்சி நிர்வாகம்அறிவித்துள்ளது.