/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணிகள் துவங்குமா என எதிர்பார்ப்பு
/
சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணிகள் துவங்குமா என எதிர்பார்ப்பு
சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணிகள் துவங்குமா என எதிர்பார்ப்பு
சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணிகள் துவங்குமா என எதிர்பார்ப்பு
ADDED : பிப் 09, 2024 10:07 PM

மதுராந்தகம்:சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் மூலமாக, செய்யூர்- -- வந்தவாசி, சேத்துப்பட்டு --- போளூர் சாலை, இருவழித்தடமாக மாற்றப்படுகிறது.
ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், 603 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, கடந்த இரண்டு ஆண்டு களாக நடந்து வருகிறது.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 37 கி.மீ., நீளமும், திருவண்ணாமலை மாவட்டத்தில், 72 கி.மீ., நீளமும் அகலப்படுத்தப்படுகிறது. இப்பணி, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலமாக நடக்கிறது.
இத்திட்டத்தில், ஐந்து உயர்மட்ட பாலங்கள், 12 சிறுபாலங்கள், ஒரு ரயில்வே கீழ்பாலம், 214 வாய்க்கால் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. சாலை பணி 94.5 சதவீதம் முடிந்து உள்ளது.
இதன் காரணமாக, இச்சாலையை அதிகளவிலான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், சோத்துப்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப் படாமல் உள்ளது.
அதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், ரயில்கள் அதிகமாக தண்டவாளத்தை கடப்பதன் காரணமாக, சாலையில் காத்திருக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாலைப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள், இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.