/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியிடம் நகை பறிப்பு
/
கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியிடம் நகை பறிப்பு
ADDED : ஆக 13, 2025 10:56 PM
செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த சாத்தனஞ்சேரியைச் சேர்ந்தவர் கல்யாணி, 64. இவர், நேற்று முன்தினம் மாலை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள உறவினரைப் பார்த்துவிட்டு, ஷேர் ஆட்டோவில் புதிய பேருந்து நிலையம் வந்து இறங்கியுள்ளார்.
அப்போது, ஆட்டோவில் உடன் வந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கல்யாணியை பின்தொடர்ந்து வந்துள்ளார். அச்சமடைந்த கல்யாணி, செங்கல்பட்டு பஜார் வீதியில் நுழைந்துள்ளார்.
அப்போது, கல்யாணியிடம் கத்தியைக் காட்டிய மிரட்டிய அந்த நபர் தங்கத்தாலி, மூக்குத்தி என, 2 சவரன் நகை மற்றும் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார்.
இது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் கல்யாணி அளித்த புகாரை அடுத்து, சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

