/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இளநிலை உதவியாளர் தேர்வு: 15ல் பயிற்சி வகுப்பு
/
இளநிலை உதவியாளர் தேர்வு: 15ல் பயிற்சி வகுப்பு
ADDED : செப் 12, 2025 10:04 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணி இடங்களுக்கு, எழுத்து தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான பயிற்சி வகுப்பு, வரும் 15ம் தேதி துவக்கப் படுகிறது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களை, நேரடி நியமனம் மூலமாக நிரப்ப உள்ளனர்.
இப்பணியிடங்களுக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பித்து உள்ளனர்.
இந்நியமனத்திற்கான எழுத்துத்தேர்விற்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 15ம் தேதி காலை 10:00 மணிக்கு, பயிற்சி வகுப்பு நடக்கிறது.
தகுதியும், விருப்பமும் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் விண்ணப்பித்த விண்ணப்ப நகலுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விபரங் களுக்கு, 044- 2742 6020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.