/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காலவாக்கம் ஆறுவழி சாலையோரம் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
/
காலவாக்கம் ஆறுவழி சாலையோரம் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
காலவாக்கம் ஆறுவழி சாலையோரம் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
காலவாக்கம் ஆறுவழி சாலையோரம் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 18, 2024 01:31 AM

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளில், 30,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், காலவாக்கம் ஆறுவழிச்சாலை அருகே உள்ள தற்காலிக குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.
அவ்வப்போது, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. எனினும், சுற்றுவட்டார பகுதியிலிருந்து குப்பை கொண்டுவந்து இந்த கிடங்கில் இரவு நேரத்தில் தெரியாமல் கொட்டிவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.
இதனால், சாலையோரம் குப்பை கழிவுகள் குவிந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. அதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருவதோடு, தொற்று நோய் அபாயமும் ஏற்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், இந்த குப்பை கிடங்கில் தீ பிடித்து எரிந்து, அப்பகுதி முழுதும் புகை மூட்டம் காணப்பட்டது. தீயணைப்பு துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர் தீயை அணைத்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இங்கு ஆய்வு மேற்கொண்டு, குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.