/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவில் விழா ஏற்பாடுகள் அனைத்து துறை ஆலோசனை கூட்டம்
/
கந்தசுவாமி கோவில் விழா ஏற்பாடுகள் அனைத்து துறை ஆலோசனை கூட்டம்
கந்தசுவாமி கோவில் விழா ஏற்பாடுகள் அனைத்து துறை ஆலோசனை கூட்டம்
கந்தசுவாமி கோவில் விழா ஏற்பாடுகள் அனைத்து துறை ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 07, 2024 10:18 PM

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் மாசி பிரம்மோற்சவ விழா, வரும் 15ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதன் பிரதான தேர்திருவிழா, 21ம் தேதி நடைபெறுகிறது.இவ்விழாவையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, செங்கல்பட்டு மாவட்ட சார் - ஆட்சியர் நாராயண சர்மா தலைமை வகித்தார்.
இதில், ஹிந்து சமய அறநிலைம், பேரூராட்சி, காவல், நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, வருவாய் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேர் செல்லும் நான்கு மாடவீதிகளில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீராக வைத்திருத்தல், குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், கோவிலின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, சார் ஆட்சியர் கோவில் தேர், நடைபெறும் மற்ற முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

