தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அடிப்படை வசதி நிறைவேற்ற கீரப்பாக்கம் மக்கள் கோரிக்கை

 அடிப்படை வசதி நிறைவேற்ற கீரப்பாக்கம் மக்கள் கோரிக்கை

 அடிப்படை வசதி நிறைவேற்ற கீரப்பாக்கம் மக்கள் கோரிக்கை


ADDED : மார் 14, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீரப்பாக்கம்: கீரப்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பில், அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என, பகுதிமக்கள் தெரித்துள்ளனர்.

வண்டலுார் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1,760 வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, 2025 மே 11-ல் திறக்கப்பட்டது.

இங்கு, 'மொபைல் போன் டவர்', கண்காணிப்பு கேமரா, மின் மயானம், போலீஸ் பூத், பேருந்து நிழற்குடை உட்பட 10 அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரக்கோரி, அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, பகுதிமக்கள் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் கோரிக்கைகள் குறித்து, 'மக்கள் சபை' என்ற கூட்டத்தை நேற்று முன்தினம் இரவு நடத்தினர்.

பொது மக்கள் கூறிய தாவது:

பிரசவம், திடீர் உடல்நலக் குறைவு, விபத்து, இறப்பு உள்ளிட்ட அவசர காலத்திற்கும் மொபைல் போனில் பேச முடியவில்லை.

தவிர, அடுக்குமாடி குடியிருப்பில் இறந்தவர்களை புதைக்க, எரிக்க சுடுகாடு மற்றும் இடுகாடு வசதியும் இல்லை.

எனவே, தேர்தல் நடைபெறுவதற்குள் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us