/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கீரப்பாக்கம் சாலைகள் படுமோசம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
/
கீரப்பாக்கம் சாலைகள் படுமோசம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
கீரப்பாக்கம் சாலைகள் படுமோசம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
கீரப்பாக்கம் சாலைகள் படுமோசம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஜன 08, 2025 12:21 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டு கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக, கீரப்பாக்கம் நான்காவது வார்டு மற்றும் ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், இருளர் குடும்பத்தினர், ஏழை தொழிலாளர் குடும்பத்தினர் அதிகமாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெரு, விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோவில் தெரு, ஊமை மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களின் சாலைகள் மிக மோசமாக சேதமடைந்து உள்ளன.
பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் இந்த சாலைகள் சேதமடைந்து உள்ளதால், அடிக்கடி சிறு சிறு விபத்து ஏற்படுகிறது.
சேதமான சாலையை சீரமைக்க கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாலைகள் 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டவை.
போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில், தற்போது இந்த சாலைகள் உள்ளன. எனவே, சேதமான சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

