/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
/
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
ADDED : நவ 05, 2025 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சி, ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, 4196 என்ற எண் கொண்ட அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது.
செங்கல்பட்டு பொறுப்பு கோட்டாட்சியர் பியூரி, மேற்கண்ட மதுபான கடையில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, மதுபாட்டில் இருப்பு, விற்பனை விபரம், கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா, பணியாளர்கள் பணியில் உள்ளனரா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டார்.
திருப்போரூர் தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உடனிருந்தனர்.

