sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்!:தினமும் 21.70 லட்சம் லிட்டர் எடுக்க முடிவு

/

கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்!:தினமும் 21.70 லட்சம் லிட்டர் எடுக்க முடிவு

கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்!:தினமும் 21.70 லட்சம் லிட்டர் எடுக்க முடிவு

கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்!:தினமும் 21.70 லட்சம் லிட்டர் எடுக்க முடிவு


ADDED : மார் 17, 2024 01:52 AM

Google News

ADDED : மார் 17, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:மாமண்டூர் பாலாற்றில் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தீவிரமடைந்து உள்ளன. தினமும், 21.70 லட்சம் தண்ணீர் எடுக்கப்பட்டு, நந்திவரம் - கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் நகராட்சிகள், மதுராந்தகம், காட்டாங்கொளத்துார் ஊராட்சிகளை சேர்ந்த பகுதிகளுக்கு, வரும் கோடை காலத்திற்குள் வினியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, தமிழ்நாடு குடிநீர் வாரியம் வாயிலாக, மாமண்டூர் பாலாற்றில் மூன்று கிணறுகள் அமைத்து, குழாய் இணைப்பு வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு பெய்த மழையால், பாலாற்றில் தண்ணீர் அதிகமாக சென்றது. அப்போது, குடிநீர் குழாய்கள், மின் கேபிள் ஒயர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதனால், நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது.

தொடர்ந்து, புதிதாக குழாய்கள் அமைத்து கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் அமைச்சர்கள், முதல்வர் ஆகியோரிடம், நகர சபை தலைவர் கார்த்திக் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அதன்பின், கூடுதல் குடிநீர் வழங்கவும், பிரதான குழாய்களை சீரமைக்கவும், 4.70 கோடி ரூபாய் நிதி கேட்டு, தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில், மாமண்டூர் பாலாற்றில் புதிதாக நீர் உறிஞ்சு கிணறு அமைத்து, சேதமடைந்த குழாய்கள், தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த பிரதான குழாய்கள் ஆகியவற்றை சீரமைக்க முடிவானது.

அதற்காக, மாநில நிதி ஆணையத்தின் ஊக்க நிதியிலிருந்து 4 கோடி ரூபாயும், மறைமலை நகர் நகராட்சி பொது நிதியில் இருந்து, 70 லட்சம் ரூபாயும் என, மொத்தம் 4.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.

செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்றில், கூட்டுக் குடிநீர் திட்டத்தில், நீர் உறிஞ்சு கிணறு மற்றும் குழாய்கள் அமைக்கும் பணியை, கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி துவக்கியது.

தற்போது, நீர் உறிஞ்சு கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கிணறு மற்றும் பைப் லைன்கள் அமைத்து, கோடை காலத்திற்குள் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது என, வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தில், மாமண்டூர் பாலாற்றில் நீர் உறிஞ்சு கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோடை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

- தமிழ்நாடு குடிநீர் வாரிய பொறியாளர்கள், செங்கல்பட்டு.

பகுதி வாரியாக குடிநீர் வினியோகம்

நந்திவரம் -- கூடுவாஞ்சேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில், மாமண்டூர் பாலாற்றில் இருந்து, தினமும் 21.70 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட உள்ளது.இதில் இருந்து, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, 6.50 லட்சம் லிட்டர்; மறைமலை நகர் நகராட்சியில், திருக்கச்சூர், காட்டாங்கொளத்துார், நின்னக்கரை, பொத்தேரி, தைலாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, 6.24 லட்சம் லிட்டர்; மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் மாமண்டூர், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் இருங்குன்றப்பள்ளி, வேதநாராயணபுரம், புலிப்பாக்கம், காந்தலுார், ராஜகுளிப்பேட்டை, மலையம்பாக்கம், திருத்தேரி, பாரேரி, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட 19 கிராமங்களுக்கு, 8.76 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.








      Dinamalar
      Follow us