/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கெங்கச்சியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
கெங்கச்சியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 09, 2025 01:42 AM

சூணாம்பேடு:சூணாம்பேடு பஜார் பகுதியில், பழமை வாய்ந்த கெங்கச்சியம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, 90 லட்சம் ரூபாய் செலவில், கடந்த 3 ஆண்டுகளாக புதிய கோவில் கட்டி, திருப்பணி மேற்கொண்டனர்.
புதிய விமானம், மண்டபம், விநாயகர், வராஹி, காத்தவராய சுவாமி மற்றும் நாகராஜருக்கு புதிய சிலைகள் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் முடிந்தன. இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகள், நேற்று முன்தினம் துவங்கின.
தொடர்ந்து கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜைகள் நடந்தன.
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழாவில், இன்று காலை 9:40 மணியளவில் கோவில் கோபுர விமானத்திற்கும், 9:50 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

