/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எரியாத உயர் கோபுர மின் விளக்குகள் குண்ணவாக்கம் கிராமத்தினர் அச்சம்
/
எரியாத உயர் கோபுர மின் விளக்குகள் குண்ணவாக்கம் கிராமத்தினர் அச்சம்
எரியாத உயர் கோபுர மின் விளக்குகள் குண்ணவாக்கம் கிராமத்தினர் அச்சம்
எரியாத உயர் கோபுர மின் விளக்குகள் குண்ணவாக்கம் கிராமத்தினர் அச்சம்
ADDED : மே 26, 2025 11:56 PM

மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த கிராம மக்கள் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில், தினமும் வேலைக்குச் சென்று வருகின்றனர்.
சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குண்ணவாக்கம் வழியாக மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்த கிராமத்தில் அம்மணம்பாக்கம் -- அஞ்சூர் சாலை, குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலை உள்ளிட்ட இடங்களில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
இதனால், இப்பகுதி மக்கள் அச்சமின்றி சென்று வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த உயர்கோபுர மின் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன.
எனவே, இந்த உயர்கோபுர மின் விளக்குகளை பழுது நீக்க, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.