/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேரி-கார்டில் பைக் மோதி கூலித்தொழிலாளி பலி
/
பேரி-கார்டில் பைக் மோதி கூலித்தொழிலாளி பலி
ADDED : ஜூலை 23, 2025 01:48 AM
சித்தாமூர்:கீழ்கரணையில், செய்யூர் - போளூர் சாலையில் இருந்த இரும்பு தடுப்பில் மோதி, பைக்கில் சென்றவர் உயிரிழந்தார்.
செய்யூர் அடுத்த வாழப்பட்டு கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதுரை, 40; கூலித்தொழிலாளி.
நேற்று முன்தினம் இரவு, 11:40 மணியளவில், மதுராந்தகத்தில் இருந்து செய்யூர் நோக்கி, 'ஹோண்டா சைன்' பைக்கில் சென்றார்.
சித்தாமூர் அடுத்த கீழ்கரணை கிராமத்தில் சென்ற போது, சாலையில் இருந்த 'பேரிகார்டு' எனும் இரும்பு தடுப்பின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த மதுரையை அங்கிருந்தோர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பினர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, தகவலின்படி வந்த சித்தாமூர் போலீசார், மதுரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.