ADDED : ஏப் 17, 2026 10:25 PM
அ நிறம் | அளவு
கூவத்துார்:கூவத்துாரை சேர்ந்தவர் கருணாகரன், 50. இவர் பனைமரம் ஏறும் கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், கூவத்துார் கிராமத்தில் கூலிக்கு, தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறிப்பதற்காக மரத்தில் ஏறியுள்ளார்.
அப்போது கால்தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை சிகிச்சை பலனிளிக்காமல் இறந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கூவத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
