/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுவன் கொலை வழக்கில் கூலி தொழிலாளிக்கு '10 ஆண்டு'
/
சிறுவன் கொலை வழக்கில் கூலி தொழிலாளிக்கு '10 ஆண்டு'
சிறுவன் கொலை வழக்கில் கூலி தொழிலாளிக்கு '10 ஆண்டு'
சிறுவன் கொலை வழக்கில் கூலி தொழிலாளிக்கு '10 ஆண்டு'
ADDED : ஆக 02, 2025 12:35 AM
செங்கல்பட்டு:சிறுவனை கொலை செய்தவருக்கு, 10ஆண்டுகள் சிறை தண்டதனை விதித்து, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றம், தீர்ப்பளித்தது.
சென்னை, மேடவாக்கம் வெள்ளக்கல் அம்பேத்கர் குடியிருப்பைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் கபாலி, 12. இவர்களது வீட்டின் அருகில் விழுப்புரம் மாவட்டம், அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், 36 என்பவர், தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
கபாலியும், லட்சுமண னும் நண்பர்களாக இருந்தனர். இருவருக்கும் குடி பழக்கம் இருந்தது. அப்போது, மது அருந்தும்போது, லட்சுமணனை அசிங்கமாக திட்டுவதை, சிறுவன் கபாலி வழக்கமாக வைத்திருந்தார்.
நன்மங்கலம் அருணோதயா நகர் அருகேயுள்ள, வனத்துறைக்கு சொந்தமான காட்டு பகுதியில், கடந்த 2012 பிப்., 27ம் தேதி, கபாலியும், லட்சுமணனும் மது அருந்தினர்.
கபாலிக்கு போதை ஏறியதும், அசிங்கமான வார்த்தைகளால் லட்சுமணனை திட்டி உள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த லட்சுமணன், கபாலியை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சரவணக்குமார் முன்னிலையில், நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வையாபுரி ஆஜாரானார்.
வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், லட்சுமணனுக்கு, பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சரவணக்குமார், நேற்று, தீர்ப்பளித்தார்.