/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.5 கோடி மதிப்பு நிலம் கூடுவாஞ்சேரியில் மீட்பு
/
ரூ.5 கோடி மதிப்பு நிலம் கூடுவாஞ்சேரியில் மீட்பு
ADDED : அக் 09, 2025 11:01 PM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட, 5 கோடி ரூபாய் மதிப்பிலான பூங்கா நிலத்தை, நகராட்சி அதிகாரிகள் மீட்டனர் .
நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகரில், சர்வே எண் 68/1ல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது.
நகராட்சிக்கு சொந்தமான 9,102 சதுர அடி கொண்ட இந்த காலிமனை, தனி நபர்கள் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து, நந்தி வரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு தொடர் புகார்கள் வந்தன.
இதையடுத்து, நகராட்சி கமிஷனர் சந்தானம் தலைமையில், போலீசார் பாதுகாப்புடன் சென்ற நகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டனர்.
மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை செய்தனர். இந்த இடத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.