/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கல் சரணாலயத்தில் மண் சரிவு மீண்டும் கருங்கல் பதிக்க வேண்டுகோள்
/
வேடந்தாங்கல் சரணாலயத்தில் மண் சரிவு மீண்டும் கருங்கல் பதிக்க வேண்டுகோள்
வேடந்தாங்கல் சரணாலயத்தில் மண் சரிவு மீண்டும் கருங்கல் பதிக்க வேண்டுகோள்
வேடந்தாங்கல் சரணாலயத்தில் மண் சரிவு மீண்டும் கருங்கல் பதிக்க வேண்டுகோள்
ADDED : செப் 28, 2025 11:49 PM
மதுராந்தகம்;வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரிக்கரை பகுதியில், மண் சரிவை தடுக்க, மீண்டும் கருங்கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் அருகே உள்ள உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், 86 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கடந்த 2023ல், மதுராந்தகம் நெடுஞ்சாலைத் துறை மூலமாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நுழைவாயில் அருகே இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு, சாலை அகலப்படுத்தப்பட்டது.
இப்பணிக்காக, ஏரிக்கரை பகுதியில் மண் சரிவை தடுக்கும் வகையில் பதிக்கப்பட்டு இருந்த, கருங்கற்களை அப்புறப் படுத்தினர்.
ஆனால், பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், நெடுஞ்சாலைத் துறையினர் அந்த கற்களை மீண்டும் பதிக்கவில்லை.
அதேபோன்று, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட பகுதிகளில் சிமென்ட் கல் பதித்து நடைபாதை அமைத்து, ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் கம்பி வேலி அமைக்கப்படும் என தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை அப்பணியை முழுமையாக செய்து முடிக்கவில்லை.
தற்போது, மழை பெய்யும் போது, ஏரிக்கரையில் இருந்து மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சகதியாகிறது. இதனால், சுற்றுலா பயணியர் சிரமப்படுகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஏரிக்கரை பகுதியில் மண்ணரிப்பை தடுக்கும் வகையில் பதிக்கப்பட்டு இருந்த, கருங்கற்களை, மீண்டும் பதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.