/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தனித்தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு

ADDED : ஜூன் 12, 2025 11:11 PM
செங்கல்பட்டு:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள, இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
மார்ச் 2013 முதல் செப்., 2018ம் ஆண்டு வரையிலான காலத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதவர்களுக்கு, இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், சம்பந்தப்பட்ட தனித்தேர்வர்கள், தேர்வு எழுதியதற்கான உரிய ஆவணங்களுடன் அணுகி, காஞ்சிபுரம் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில், வரும் செப்., 8ம் தேதிக்குள், தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இந்த தேதிக்குள் பெறப்படாத சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்படும். அதன் பின் சான்றிதழ்களை பெற விரும்புவோர், இரண்டாம்படி சான்றிதழுக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 044- 2989 5700 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.