/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லத்துார் பி.டி.ஓ., ஆபீசில் இரவு காவலரின்றி திணறல்
/
லத்துார் பி.டி.ஓ., ஆபீசில் இரவு காவலரின்றி திணறல்
ADDED : மார் 29, 2025 06:55 PM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் பஜார் பகுதியில், லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்படுகிறது.
இது லத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஊராட்சிகளுக்கு தலைமையிடமாக உள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொறியாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், அலுவலக உதவியாளர் என, 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன், இங்கு இரவு நேர காவலராக பணிபுரிந்து வந்தவர், அலுவலக உதவியாளராக பதவி உயர்வு பெற்றார். அதில் இருந்து தற்போது வரை, இரவு நேர காவலர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால், சுழற்சி முறையில் அலுவலக உதவியாளர்கள் இரவு நேர காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இதனால், அலுவலக உதவியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் கவனித்து, லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு நேர காவலர் பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.