/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் வக்கீல்கள் போராட்டம்
/
செங்கையில் வக்கீல்கள் போராட்டம்
ADDED : நவ 11, 2025 10:10 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், 41; பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர்.
கடந்த 9ம் தேதி இரவு, செங்கல்பட்டு பரனுார் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் சசிகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 15 பேர் மீதும், போராட்டத்தில் ஈடுபட்ட சசிகுமார், நகர பா.ஜ., தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட பா.ஜ.,வினர் 10 பேர் மீதும், செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சசிகுமார், மகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்து நேற்று, செங்கல்பட்டு நீதிமன்றம் எதிரே, செங்கல்பட்டு -- மதுராந்தகம் சாலையில், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

