/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிபராசக்தி சித்தர்பீட ஆடிப்பூரம் செங்கைக்கு 28ல் உள்ளூர் விடுமுறை
/
ஆதிபராசக்தி சித்தர்பீட ஆடிப்பூரம் செங்கைக்கு 28ல் உள்ளூர் விடுமுறை
ஆதிபராசக்தி சித்தர்பீட ஆடிப்பூரம் செங்கைக்கு 28ல் உள்ளூர் விடுமுறை
ஆதிபராசக்தி சித்தர்பீட ஆடிப்பூரம் செங்கைக்கு 28ல் உள்ளூர் விடுமுறை
ADDED : ஜூலை 17, 2025 09:44 PM
செங்கல்பட்டு:ஆதிபராசக்தி சித்தர்பீட ஆடிப்பூரம் விழாவையொட்டி, வரும் 28ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா நடைபெறும். இந்த ஆண்டு, 54வது ஆண்டு ஆடிப்பூரம் பெருவிழா, வரும் 26ம் தேதி துவங்கி, 27ம் தேதி கஞ்சி வார்த்தல், 28ம் தேதி பாலாபிஷேகம் ஆகியவை நடக்கின்றன.
இவ்விழாவில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள், கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக, சித்தர் பீடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, ஆதிபராசக்தி சித்தர் பீட ஆடிப்பூரம் விழாவையொட்டி, வரும் 28ம் தேதி திங்கட்கிழமை, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடு செய்ய, வரும் ஆக., 9ம் தேதி சனிக்கிழமை, பணி நாளாக அறிவிக்கப்படுவதாக, கலெக்டர் சினேகா தெரிவித்து உள்ளார்.