/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பராமரிப்பற்ற பேரமனுார் பூங்கா சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
பராமரிப்பற்ற பேரமனுார் பூங்கா சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
பராமரிப்பற்ற பேரமனுார் பூங்கா சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
பராமரிப்பற்ற பேரமனுார் பூங்கா சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : ஜன 12, 2025 02:14 AM

மறைமலைநகர்,
மறைமலைநகர் நகராட்சி, பேரமனுார் கிராமத்தில் விவேகானந்தா நகர், தர்ணீஸ்கொயர் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர், இங்கு புதிதாக வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர். இந்த பகுதியில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நகராட்சி சார்பில், கடந்த 2016ம் ஆண்டு விவேகானந்தர் நகர் பகுதியில், குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல், முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சிமென்ட் கற்கள் கொண்டு நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது.
துவக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட பூங்கா, கடந்த சில ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு, வீணாகி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பூங்கா பூட்டி வைக்கப்பட்டு உள்ளதால், அனைத்து உபகரணங்களும் வீணாகி வருகின்றன.
சிறுவர்கள் விளையாட இடவசதி இல்லாததால், நீண்ட துாரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. முதியவர்கள் தெருக்களில் நடைபயிற்சி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ள பூங்காவை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.