/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'உங்களை தேடி; உங்கள் ஊரில்' மதுராந்தகத்தில் இன்று முகாம்
/
'உங்களை தேடி; உங்கள் ஊரில்' மதுராந்தகத்தில் இன்று முகாம்
'உங்களை தேடி; உங்கள் ஊரில்' மதுராந்தகத்தில் இன்று முகாம்
'உங்களை தேடி; உங்கள் ஊரில்' மதுராந்தகத்தில் இன்று முகாம்
ADDED : பிப் 20, 2024 11:09 PM
செங்கல்பட்டு:மதுராந்தகத்தில் உங்களை தேடி; உங்கள் ஊரில் என்ற புதிய திட்ட முகாம், இன்று நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மதுராந்தகம் தாலுகாவில், உங்களை தேடி; உங்கள் ஊரில் சிறப்பு முகாம், இன்று காலை 10:00 மணிக்கு, அனைத்து துறை அலுவலர்களால், அனைத்து அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலை கடைகள், பள்ளிகள், பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், முகாம் மாலை 4:30 -மாலை 6:00 மணி வரை நடக்கிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம், இன்று காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் குறைகள் குறித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீடுகள் மருத்துவ குழு மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்த முகாமில், உபகரணங்கள், கல்வி, திருமண உதவித் தொகைகள், வங்கி கடன் மானியம் மற்றும் ஆவின் பாலகம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீடுகள் ஒதுக்கீடு போன்ற திட்டங்களுக்கு, மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

