ADDED : மார் 06, 2026 06:17 AM

அ நிறம் | அளவு
மறைமலை நகர்: தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று அதிகாலை டாரஸ் லாரி சென்றது.
டாரஸ் லாரியை மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவீரராகவன், 40, என்பவர் ஓட்டினார். ஜி.எஸ்.டி., சாலையில் மகேந்திரா சிட்டி பகுதியில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை ஓர தடுப்பில் மோதி சாலை மைய தடுப்பு சுவரில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் வேகமாக மோதியது.
இதில் சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக வீரராகவன் காயமின்றி தப்பினார். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த சிங்கபெருமாள் கோவில் போலீசார், கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் லாரி மற்றும் உடைந்த சிக்னல் கம்பங்களை அப்புறப்படுத்தினர்.
