/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மையதடுப்பு மீது மோதிய லாரி ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
/
மையதடுப்பு மீது மோதிய லாரி ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
மையதடுப்பு மீது மோதிய லாரி ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
மையதடுப்பு மீது மோதிய லாரி ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
ADDED : செப் 13, 2025 01:15 AM

பெருங்களத்துார்:பெருங்களத்துார் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலை மைய இரும்பு தடுப்பு மற்றும் மரங்கள் மீது மோதிய லாரியால், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டிவனத்தில் இருந்து லாரி ஒன்று, நேற்று அதிகாலை சென்னை துறைமுகத்திற்கு சென்றது. லாரியை, திண்டிவனத்தை சேர்ந்த செந்தில், 35, என்பவர் ஓட்டினார்.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, பெருங்களத்துார் இரணியம்மன் கோவில் அருகே அருகே வந்தபோது, ஓட்டுநர் துாக்கக் கலக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுற இரும்பு தடுப்புகள் மீது மோதி, மையத்தடுப்பில் இருந்த சிக்னல் கம்பம் மற்றும் மூன்று மரங்கள் மீது அடுத்தது மோதி நின்றது.
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி ஓட்டுநர் செந்தில் தப்பினார்.
சிக்னல் கம்பம் உடைந்தது. அதோடு, மரக்கிளைகள் உடைந்து சாலையில் விழுந்தன.
இதனால், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் விரைந்து வந்து, மரக்கிளைகளை வெட்டி, கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர்.
இதனால், பெருங்களத்துார் அருகே ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று காலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.