ADDED : செப் 02, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவிலில், லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவரை, போலீசார் கைது செய்தனர்.
சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகில், சந்தேகப்படும் வகையில் திரிந்த முதியவர் ஒருவரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 20 லாட்டரி சீட்டுகள் இருந்தன.
விசாரணையில் அவர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த வெங்கிடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன், 70, என தெரிந்தது. இதையடுத்து, ராமனை போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.