/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தற்காலிக பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி பழுதால் அலைச்சல்
/
தற்காலிக பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி பழுதால் அலைச்சல்
தற்காலிக பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி பழுதால் அலைச்சல்
தற்காலிக பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி பழுதால் அலைச்சல்
ADDED : அக் 30, 2024 01:50 AM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், மாநில போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ், 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூனாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழி நாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் என, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
தற்போது, தற்காலிக பேருந்து நிலையத்தில், ஒவ்வொரு வழித்தடத்திற்கான தனித்தனி இடவசதி இல்லாததால், அரசு பேருந்து வரும் நேரம் மற்றும் புறப்படும் நேரம் குறித்த அறிவிப்புகள், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பணிமனையின் நேர காப்பாளர் அலுவலக பணியாளரால், ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்படுகிறது.
சில தினங்களாக, ஒலி பெருக்கி பழுதடைந்துள்ளதால், பேருந்து குறித்து அறிவிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், பேருந்துகள் வரும், புறப்படும் நேரம் குறித்த அறிவிப்புகள் தெரியாமல், பயணியர் அவதிப்படுகின்றனர். .
எனவே, தற்காலிக பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள ஒலி பெருக்கியை சீரமைக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.