/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் வட்டாட்சியர் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
/
மதுராந்தகம் வட்டாட்சியர் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
மதுராந்தகம் வட்டாட்சியர் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
மதுராந்தகம் வட்டாட்சியர் ஆபீசில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
ADDED : ஜன 28, 2025 07:50 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பொதுமக்கள் தாகத்தில் தவித்து வருகின்றனர்.
மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது.
இங்கு, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள், தங்களின் கோரிக்கைகள், புகார் மனுக்கள் மற்றும் ஆவணங்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பட்டா உள்ளிட்ட பல்வேறு விதமான ஆவணங்கள் பெற, நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
அவர்களின் தேவைக்காக அலுவலக வளாகத்தில், குடிநீர் வசதி செய்யப்படவில்லை.
அதனால், அருகில் உள்ள கடைகளில், பாட்டிலில் உள்ள குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.
எனவே, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மினி டேங்க் வசதி ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.