/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா
அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா
அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 08, 2025 02:15 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி கோவிலில் புனராவர்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், இன்று நடக்கிறது.
இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மற்றும் கோவில் அர்த்த மண்டபம் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அங்காள பரமேஸ்வரி கோவில், அர்த்த மண்டபம் அனைத்தும், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் சிவகுமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் பொன்மலர் சிவக்குமார் குடும்பத்தாரின் முழு செலவில் கட்டுமான பணிகள் நடந்தன. பணிகள் முடிவுற்று, மஹா கும்பாபிஷேகம் நடத்த, நேற்று முன்தினம் பந்தக்கால் நடப்பட்டது.
நேற்று மூன்று கால பூஜை முடிந்து யந்திர உபசாரம், தேவார திருமுறைகள் விண்ணப்பம், மஹா தீபாராதனை நடந்தன.
இன்று காலை 6:00 மணிக்கு மங்கல இசை, நான்காம் கால யாகசாலை பூஜைகள் துவங்கி, காலை 8:00 மணிக்கு கலசம் புறப்பாடு நடக்கிறது.
காலை 8:30 மணி முதல் 8:45 மணியளவில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், விமான கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பின், காலை 9:00 மணிக்கு விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும்.
இன்று இரவு, 7:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அங்காள பரமேஸ்வரி திருவீதி உலா வருதல் நடக்க உள்ளது.