/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மஹாவீர் ஜெயந்தி இன்று டாஸ்மாக் 'லீவு'
/
மஹாவீர் ஜெயந்தி இன்று டாஸ்மாக் 'லீவு'
ADDED : ஏப் 09, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு இன்று 10ம் தேதி விடுமுறை விடப்படுகிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள் மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மூடப்பட வேண்டும்.
அன்றைய தினம், மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தால், உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.