/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 53 அரசு பள்ளிகளில் ரூ.3 கோடியில் பராமரிப்பு பணி
/
செங்கையில் 53 அரசு பள்ளிகளில் ரூ.3 கோடியில் பராமரிப்பு பணி
செங்கையில் 53 அரசு பள்ளிகளில் ரூ.3 கோடியில் பராமரிப்பு பணி
செங்கையில் 53 அரசு பள்ளிகளில் ரூ.3 கோடியில் பராமரிப்பு பணி
ADDED : பிப் 16, 2025 02:37 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வருவாய் கல்வி மாவட்டத்தில், 53 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பராமரிப்பு பணிகள் துவங்கி உள்ளன.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய பகுதியில், கல்வி மாவட்டங்களில் அரசு உயர்நிலைப் பள்ளி 64, அரசு மேல் நிலைப் பள்ளிகள் 80 என, மொத்தம் 144 பள்ளிகள் உள்ளன.
இதில், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் 28, மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் அரசு உயர் நிலை, மேல்நிலை பள்ளிகள் 25 என, மொத்தம் 53 பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறை பராமரிப்பு, தரைகள் சீரமைப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்ய, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின், 53 பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் செய்ய, 2024-25ம் நிதியாண்டில், 3 கோடியே 15 ஆயிரத்து 700 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் செய்ய, பொதுப்பணித் துறையால் 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை துவக்கி உள்ளனர்.
இப்பணிகள் அனைத்தையும் இரண்டு மாதங்களில் முடித்து, கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.