/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை கோவில் திருக்குள மேம்பாடு 'சுவதேஷ் தர்ஷன்' திட்டத்தில் இணைப்பு
/
மாமல்லை கோவில் திருக்குள மேம்பாடு 'சுவதேஷ் தர்ஷன்' திட்டத்தில் இணைப்பு
மாமல்லை கோவில் திருக்குள மேம்பாடு 'சுவதேஷ் தர்ஷன்' திட்டத்தில் இணைப்பு
மாமல்லை கோவில் திருக்குள மேம்பாடு 'சுவதேஷ் தர்ஷன்' திட்டத்தில் இணைப்பு
ADDED : பிப் 16, 2024 12:07 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், கடந்த பிப்., 1ம் தேதி நடந்தது. கோவிலின் தீர்த்தமாக, புண்டரீக புஷ்கரணி எனப்படும் திருக்குளம் விளங்குகிறது.
கடற்கரை சாலையில், 2 ஏக்கர் பரப்பில் குளம் அமைந்துள்ளது. குளத்தில் நீண்ட காலத்திற்கு முன், மணலும், நீர் சுரப்பும் இருந்தது. நீரும் தொடர்ந்து சுரக்கும். குன்றில் பெய்யும் மழைநீர் சேர்ந்து, குளம் வற்றாது.
மாசி மக தெப்போற்சவம், இக்குளத்தில் ஆண்டுதோறும் நடக்கிறது. அப்போது, பக்தர்கள், கடலிலும், இக்குளத்திலும் நீராடி சுவாமியை தரிசிக்க வேண்டும்.
அத்தகைய குளம், துார் வாரப்படாமல், சேறு அதிகரித்து சீரழிந்தது. அப்பகுதியில் உள்ள கட்டடங்களால், நீர்வரத்து பாதைகள் அடைபட்டு, மழைநீர் வரத்து தடைபட்டது. குளத்தில் பெய்யும் மழைநீர், குறுகிய காலம் மட்டுமே தேங்கி, கோடையில் முற்றிலும் வறண்டு விடுகிறது.
இதற்கிடையே, சுற்றுலா மேம்பாடாக, கடந்த 1998ல், குளத்தின் நாற்புற கரையில், கற்களில் நடைதளம், மின் விளக்குகள் அமைத்து மேம்படுத்தப்பட்டது. அவையும் சீரழிந்தன.
இந்நிலையில், டி.வி.எஸ்., டர்போ நிறுவனம், கடந்த 2019ல், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரி மேம்படுத்த கருதி, கோவில் நிர்வாகத்தை அணுகியது.
நீதிமன்ற வல்லுனர் குழு அனுமதி பெற்று அனுமதிப்பதாக, அந்நிர்வாகம் தெரிவித்த நிலையில், பின் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங், சந்திப்பின்போது, குளத்தின் சீரழிவு அவலம், தடுப்பு அமைத்து மறைக்கப்பட்டது.
சேற்று சகதி குளத்தில், கொடிகள் படர்ந்து, மழைநீரும் தேங்க இயலாமல் வீணாகிறது. அதை துார்வாரி பராமரித்து மேம்படுத்த வேண்டும் என, பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
தற்போது, மத்திய அரசின் சுவதேஷ் தர்ஷன் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில், குளத்தை இணைக்க முடிவெடுத்துள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.