/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம், மகாபலிபுரம் பெயர் குழப்பம் தீர்க்கப்படுமா?
/
மாமல்லபுரம், மகாபலிபுரம் பெயர் குழப்பம் தீர்க்கப்படுமா?
மாமல்லபுரம், மகாபலிபுரம் பெயர் குழப்பம் தீர்க்கப்படுமா?
மாமல்லபுரம், மகாபலிபுரம் பெயர் குழப்பம் தீர்க்கப்படுமா?
ADDED : ஜூன் 24, 2023 12:03 AM

மாமல்லபுரம்:பல்லவர் கால சிற்பக் கலைகளுக்கு, மாமல்லபுரம் புகழ்பெற்றது. இங்குள்ள பாரம்பரிய கலைச் சிற்பங்களை காண இந்தியா மற்றும் சர்வதேச பயணியர் வருகின்றனர்.
பல்லவ மன்னன், நரசிம்மவர்மனின் 'மாமல்லன்' என்ற சிறப்பு பெயரால், மாமல்லபுரம் என, இவ்வூர் அழைக்கப்பட்டது. தமிழக அரசு நிர்வாகத்தில், மாமல்லபுரமாக பின்பற்றப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, பேச்சுமொழி வழக்கில், பலி சக்கரவர்த்தி என்ற பெயரில், 'மகாபலிபுரம்' என அழைக்கப்படுகிறது.
இதையடுத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தனியார் கடற்கரை விடுதிகள், விழுப்புரம், கடலுார் அரசு போக்குவரத்துக் கழகங்கள். புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகம், தமிழக அரசின் நடைமுறையில் உள்ள ஊர்ப் பெயரை பின்பற்றாமல், 'மகாபலிபுரம்' என்றே குறிப்பிடுகின்றன.
அண்மையில், இங்கு நடந்த, 'ஜி - 20' நாடுகள் மாநாட்டு நிகழ்வுகளிலும், மத்திய அரசு, தமிழ், ஆங்கில மொழிகளில், 'மகாபலிபுரம்' என்றே குறிப்பிட்டது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அன்றைய தமிழ் வளர்ச்சி அமைச்சர் பாண்டியராஜன், தமிழக ஊர்ப்பெயரை, ஆங்கிலத்தில் வேறு பெயராக பின்பற்றுவதை தவிர்க்க, தமிழ் நடைமுறை பெயருக்கே, ஆங்கிலத்தில் மாற்றுவதாக அறிவித்தார்.
தற்போது வரை செயல்பாட்டிற்கு வராமல், மாமல்லபுரமா... மகாபலிபுரமா? என்ற குழப்பம் நீடிக்கிறது.
ஆங்கிலத்திலும் மாமல்லபுரம் என பின்பற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.