/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்காமல் இழுத்தடிப்பு
/
மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்காமல் இழுத்தடிப்பு
மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்காமல் இழுத்தடிப்பு
மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்காமல் இழுத்தடிப்பு
ADDED : நவ 14, 2025 01:10 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் நகராட்சிக்கு கமிஷனர் நியமிக்கப்பட்டும், பொறுப்பேற்பது தாமதமாவதால் அதிருப்தி நிலவுகிறது.
சர்வதேச சுற்றுலா இடமான மாமல்லபுரம், சிறப்புநிலை பேரூராட்சியாக நீண்ட காலம் செயல்பட்டது. இப்பகுதி சுற்றுலா முக்கியத்துவம் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்துவது கருதி, இரண்டாம் நிலை நகராட்சிப் பகுதியாக, கடந்த பிப்ரவரியில் தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு கமிஷனராக நியமிக்கப்பட்டவர்கள், நிரந்தரமாக நீடிக்கவில்லை. தற்போதும், மதுராந்தகம் நகராட்சி கமிஷனரே, இங்கும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
இதனால் நிர்வாக செயல்பாடுகள் முடங்கி, பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி கமிஷனர் பாலமுருகனை, இரண்டு வாரங்களுக்கு முன் மாமல்லபுரத்திற்கு நியமித்து உத்தரவிடப்பட்டது.
ஆனால், தற்போது வரை அவர் பொறுப்பேற்காமல் தாமதமாவதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

