/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.5 லட்சம் திருடியவர் கைது
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.5 லட்சம் திருடியவர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.5 லட்சம் திருடியவர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.5 லட்சம் திருடியவர் கைது
ADDED : ஏப் 06, 2025 02:06 AM

செய்யூர்:செய்யூர் அடுத்த சின்னவெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் 46, இவர் சென்னை திருவெற்றியூர் பகுதியில் தங்கி சுயதொழில் செய்து வருகிறார்.
இரண்டு தினங்களுக்கு முன் சின்னவெண்மணி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்து, இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்பினார்.
சென்னை சென்று, காலை வீட்டில் உள்ள கேமராக்களை மொபைல் போனில் பார்த்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன.
பின் ரமேஷ் சென்னையில் இருந்து, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவை உடைத்து 2.5 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றதும், அவசரத்தில் திருடன் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றதும் தெரிந்தது. இதுகுறித்து ரமேஷ் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஜமீன் எண்டத்துார் பகுதியை சேர்ந்த சரவணன் 29, என்பவரை கைது செய்தனர்.

