/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியரை சீண்டியவர் போக்சோவில் கைது
/
சிறுமியரை சீண்டியவர் போக்சோவில் கைது
ADDED : பிப் 15, 2025 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய ஊழியர் கருப்பசாமி, 45. இவர், அணுபுரம் நகரியத்தில் உள்ள அமராவதி குடியிருப்பில், குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவர், கடந்த டிசம்பர் மாதம் முதல், பல சிறுமியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியரின் பெற்றோர் அவரைக் கண்டித்தும், தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து, சதுரங்கப்பட்டினம் போலீசில், பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதையறிந்த கருப்பசாமி, சொந்த ஊரான தேனி மாவட்ட பகுதிக்கு தப்பித்து தலைமறைவானார்.
போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடிப் பிடித்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்தனர்.