/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உ.பி., வாலிபரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
/
உ.பி., வாலிபரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
ADDED : டிச 16, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சர்வேஷ் குமார், 32.
கடந்த 13ம் தேதி இரவு 8:30 மணியளவில், மறைமலை நகரில் நடந்து சென்ற போது, இவரது மொபைல் போனை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
புகாரின்படி மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், மயிலாடுதுறை மாவட்டம், இலுப்பூர் பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன்,23, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின், சிவச்சந்திரனை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

