/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலை செய்த ஹோட்டலில் ரூ.75,000 அடித்தவர் கைது
/
வேலை செய்த ஹோட்டலில் ரூ.75,000 அடித்தவர் கைது
ADDED : பிப் 02, 2025 12:26 AM
ஓட்டேரி, படாளம், மங்கபதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார், 36. இவர், ஓட்டேரி, நியூ ஸ்டேரான்ஸ் சாலையில், மெஸ் நடத்தி வருகிறார்.
இவரது ஹோட்டலில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், புளியந்தோப்பை சேர்ந்த சதீஷ்குமார், 34, என்பவர், சமையல் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஜன., 25ம் தேதி திடீரென வெளியே சென்ற சதீஷ்குமார், மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பி வரவில்லை. கல்லாப் பெட்டியை பார்த்த போது, 75,000 ரூபாய் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து, ஓட்டேரி காவல் நிலையத்தில் ஆனந்த்குமார் புகார் அளித்தார். ஓட்டேரி போலீசார் சதீஷ்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 20,000 ரூபாய், 32 கிராம் சில்வர், நான்கு கிராம் தங்கம் உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.