/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்றில் மணல் திருடியவர் கைது
/
பாலாற்றில் மணல் திருடியவர் கைது
ADDED : மார் 22, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வில்லியம்பாக்கம் பாலாற்று படுகை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த நபரிடம் சோதனை செய்த போது பாலாற்றில் இருந்து மணல் திருடி வந்தது தெரிய வந்தது. ஆத்துார் பக்தவச்சலம் நகர் பகுதியை சேர்ந்த சரவணனை, 33 என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.