UPDATED : செப் 08, 2026 09:57 PM
ADDED : செப் 08, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
மறைமலை நகர்:மறைமலை நகரில் ஸ்கூட்டரை திருடிய, 40 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 'டி.வி.எஸ்., ஜூபிட்டர்' ஸ்கூட்டரில் வந்த நபர் போலீசாரை கண்டு தப்பிச் செல்ல முயன்றார்.
அந்த நபரை மடக்கி பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், மறைமலை நகர் அடுத்த காந்திநகரைச் சேர்ந்த ராஜா, 40, என்பதும், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டரை திருடி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
