/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் பலி
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் பலி
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் பலி
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் பலி
ADDED : பிப் 06, 2024 10:14 PM
மறைமலை நகர்:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 44. நீலகிரி மாவட்டம் கூடலுாரில் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பாக, மகாலிங்கம் நேற்று முன்தினம் ஆம்னி பேருந்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தார்.
அப்போது, மகாலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.