/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஷேர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
/
ஷேர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : பிப் 14, 2024 11:12 PM
செய்யூர்:செய்யூர் அருகே கீழ்க்கரணை கிராமம், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர், 22. கடந்த 9ம் தேதி காலை 9:15 மணிக்கு, வீட்டில் இருந்து செய்யூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டருக்கு, ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளார்.
ஓணம்பாக்கம் அருகே சென்ற போது, ஆட்டோவின் பின்புறத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீதர், தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஸ்ரீதர் கீழே விழுந்தது தெரியாமல், ஷேர் ஆட்டோ சென்று விட்டது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த ஸ்ரீதரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதர், நேற்று காலை 5:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து, செய்யூர் போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம், ஸ்ரீதர் சென்ற ஷேர் ஆட்டோவை தேடி வருகின்றனர்.

