/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவருக்கு 2 ஆண்டு சிறை
/
இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவருக்கு 2 ஆண்டு சிறை
இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவருக்கு 2 ஆண்டு சிறை
இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : மே 30, 2025 01:43 AM

செங்கல்பட்டு:இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து,'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்ட வழக்கில், வாலிபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு நீதிமன்றம், தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர், 23 வயது இளம்பெண். இவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முனீஷ்வரன், 33, என்பவர், 2022ம் ஆண்டு வெளியிட்டார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரையடுத்து, செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனீஷ்வரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி பிரியா முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், முனீஷ்வரனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 60,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பிரியா, நேற்று தீர்ப்பளித்தார்.
பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விபரங்கள் மற்றும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என, மாவட்ட காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சைபர் கிரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வளைதளத்தில் தங்கள் புகார்களை பதிவிட வேண்டும்.
சைபர் குற்றவாளிகள் வாயிலாக ஏற்பட்ட நிதி இழப்புகளுக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.