/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமிக்கு பாலியல் தாக்குதல் செய்தவருக்கு 5 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தாக்குதல் செய்தவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தாக்குதல் செய்தவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தாக்குதல் செய்தவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : நவ 14, 2025 10:25 PM

செங்கல்பட்டு: சிறுமியை பாலியல் தாக்குதல் செய்தவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை, பல்லாவரம் மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை, கடந்தாண்டு டிச., 19ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் பாலியல் தாக்குதல் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய், பல்லாவரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கமலக்கண்ணன், 45, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கமலக்கண்ணனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால், ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தும், நீதிபதி நசீமாபானு, நேற்று தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 2 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

