/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அவஸ்தை
/
நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அவஸ்தை
நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அவஸ்தை
நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அவஸ்தை
ADDED : பிப் 19, 2024 05:20 AM
செங்கல்பட்டு,: செங்கை புறநகர் பகுதிகளான மறைமலை நகர், பொத்தேரி, சிங்க பெருமாள் கோவில், பரனுார் உள்ளிட்ட பகுதிகளில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை முழுதும், பல இடங்களில் சாலையின் இருபுறமும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக, இந்த பகுதியில் தினமும் செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு புறவழிச்சாலை பகுதியில், மேம்பாலங்களின் கீழே, பரனுார் சுங்கச்சாவடி அருகில் உள்ள வனப்பகுதி, திருத்தேரி ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மர்ம நபர்களால் இரவு நேரங்களில் தொடர்ந்து இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
காற்றில் பறக்கும் இறக்கைகள் வாகன ஓட்டிகளின் கண்களில் படுகின்றன. இந்த குப்பையை தெருநாய்கள் கிளறுவதால், அந்த பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, நெடுஞ்சாலையில் அதிகளவில் தெருநாய்களின் நடமாட்டம் உள்ளது.
மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. சாலையில் பல இடங்களில் கான்கிரீட் கழிவுகளும் கொட்டப்படுவதால், அதில் இருந்து துகள்கள் காற்றில் பறந்து, வாகன ஓட்டிகள் கண்களை பதம் பார்க்கின்றன.
எனவே, பொது இடங்களில் இதுபோன்று குப்பை கொட்டுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

