/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த எம்.ஜி.ஆர்., சிலை அகற்றம்
/
சிங்கபெருமாள் கோவிலில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த எம்.ஜி.ஆர்., சிலை அகற்றம்
சிங்கபெருமாள் கோவிலில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த எம்.ஜி.ஆர்., சிலை அகற்றம்
சிங்கபெருமாள் கோவிலில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த எம்.ஜி.ஆர்., சிலை அகற்றம்
ADDED : நவ 09, 2025 05:10 AM

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்த எம்.ஜி.ஆர்., சிலை நேற்று அகற்றப்பட்டது.
செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக சிங்கபெருமாள் கோவில் உள்ளது. சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
மேலும், ஆப்பூர் திருக்கச்சூர், கொளத்துார், தெள்ளிமேடு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்க பெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 138.27 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த ஜூனில் திறக்கப்பட்டது.
இங்கு தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் மேம்பாலம் இறங்கும் பகுதியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை சாலையின் நடுவே, விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இந்த சிலையை சுற்றி தடுப்புகள் அமைக்காமல் மேம்பாலம் திறக்கப்பட்டதால், விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். இதனால் சிலையை அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, கடந்த 29ம் தேதி செங்கல்பட்டு வட்டாட்சியர் தலைமையில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், காவல் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடையே பேச்சு நடந்தது.
இதில், சிலையை அகற்றி இதே பகுதியில் இடையூறின்றி, 250 மீட்டர் துாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, போலீசார் பாதுகாப்புடன் கிரேன் இயந்திரத்தை பயன்படுத்தி, எம்.ஜி.ஆர்., சிலை அகற்றப்பட்டது. தொடர்ந்து சிலையை மாற்று இடத்தில் வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

