/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கைவினை கலைஞர்களுக்கு விருது அமைச்சர் அன்பரசன் வழங்கினார்
/
கைவினை கலைஞர்களுக்கு விருது அமைச்சர் அன்பரசன் வழங்கினார்
கைவினை கலைஞர்களுக்கு விருது அமைச்சர் அன்பரசன் வழங்கினார்
கைவினை கலைஞர்களுக்கு விருது அமைச்சர் அன்பரசன் வழங்கினார்
ADDED : நவ 18, 2025 03:51 AM

மாமல்லபுரம்: கைவினை கலைஞர்களுக்கு 2023 -24, 2024 - 25 ஆகிய ஆண்டுகளின் விருதுகள் வழங்கும் விழா, மாமல்லபுரம் 'ரேடிசன் புளூ' விடுதியில், நேற்று நடந்தது. தமிழக கைவினைகலைஞர்களை கண்டறிந்து, அவர்களின் விபரங்களை தனி இணையத்தில் பதிவேற்றி, அரசின் சேவைகளை வழங்குவதற்கான மொபைல் போன் செயலியை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி, விருதுகள் வழங்கினார்.
குழு உற்பத்தி விருது, மூன்று கைவினை குழுக்களுக்கு தலா 40,000 ரூபாய், 4 கிராம் தங்க பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழ் வழங்கப்பட்டன.
பயன்பாடு சார்ந்த கைவினைப் பொருட்கள் விருது மூன்று பேருக்கு, தலா 40,000 ரூபாய், 4 கிராம் தங்க பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழ் வழங்கப்பட்டன.
அடுத்த தலைமுறையினர் கைத்திறன் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 272 பேருக்கு, தலா 2,000 ரூபாய், வெள்ளி பதக்கம், சான்றிதழ், மாவட்டங்களில் 16 வகை கைத்திற தொழில்களில் சிறந்து விளங்கும், 70 பெண்கள் உள்ளிட்ட 131 பேருக்கு, பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது, தலா 10,000 ரூபாய், வெள்ளி பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.
மேலும், தஞ்சாவூர் வீணை மற்றும் நெட்டி கலை, செட்டிநாடு கொட்டான், தைக்கால் மூங்கில் பிரம்பு, மானாமதுரை மண்பாண்டம், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், கருப்பூர் கலம்காரி ஆகியவற்றுக்கான புவிசார் குறியீடு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழாவில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, கைத்திறன் உள்ளிட்ட துறைகள் செயலர் அமுதவல்லி, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் கழக மேலாண் இயக்குநர் அமிர்தஜோதி, மாவட்ட கலெக்டர் சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

