தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ எம்.எல்.ஏ., உறுதி

 எம்.எல்.ஏ., உறுதி

 எம்.எல்.ஏ., உறுதி


ADDED : ஜூன் 08, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 02:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கானத்துார், கரிகாட்டுக்குப்பம், முட்டுக்காடு பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை 7:30 மணியளவில் ஏற்பட்ட மின் தடை, நள்ளிரவு வரை நீடித்தது. ஆத்திரமடைந்த பகுதி மக்கள், இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கானத்துார் போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, நள்ளிரவு 12:30 மணியளவில் மின் வினியோகம் சீரானது.

இந்நிலையில், அங்கு வந்திருந்த திருப்போரூர் - எம்.எல்.ஏ., விஜயராஜ், மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்களிடம் விளக்கமளித்து கொண்டு இருந்தார். அப்போது, மீண்டும் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை சமாதானப்படுத்திய எம்.எல்.ஏ., ஓரிரு மாதங்களில் மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்; இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us